வேப்பனப்பள்ளி: விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 1 அரை மாதங்களாக இரண்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகரமாகனப்பள்ளி, கே. கொத்தூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. 

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தெரிவித்தனர். இதை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்கு வந்து யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வனத்துறையினர் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி