கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சிம்பல்திராடி பகுதியை சேர்ந்த சம்பத், சின்னகொத்தூர் சாலையில் செவ்வாய்க்கிழமை தனது டூ வீலரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு டூ வீலருடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டார். இந்த விபத்தில் சம்பத் மற்றும் திம்மராஜ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.