கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி போலீசார் காட்டாயம்பேடு வனப்பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக வந்த தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடத்தூர் ராஜேந்திரன் (34), நாகராஜ் (47), திம்மராஜ் (27) ஆகிய மூவர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தபோது பிடிபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.