கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் வேப்பனப்பள்ளி -கிருஷ்ணகிரி சாலை முஸ்லீம்பூர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்ட போது 130 தடுப்பு கற்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.