கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தக்காளிதான் விவசாயிகளின் முக்கிய விளைபொருள். கடந்த சில மாதங்களாக வரத்து அதிகரிப்பு மற்றும் இரட்டிப்பு விளைச்சல் காரணமாக, தக்காளி விலை கிலோ ரூ. 10க்கு கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், தக்காளியைப் பறிக்காமல் தோட்டத்திலேயே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.