கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ராமசந்திரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் பசு மாட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த கிஷோர், சாமந்தமலையை சேர்ந்த கிருஷ்ணன், பிரசாந்த் ஆகிய மூன்று பேர் பசு மாட்டை திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட பசு மாட்டை மீட்டனர். மேலும், மாட்டை திருட பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.