போச்சம்பள்ளி: பக்ரீத்தை முன்னிட்டு.. சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள மஜிதுநேனூர் மசூதியில் நசூருதீன் மற்றும் நிசார் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டு பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் புலியூர், பணங்காட்டூர், அரசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அந்தந்த இடங்களில், மிகுந்த அமைதியான முறையில் இஸ்லாமிய மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி