கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தென்பெண்ணை மற்றும் ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் சீராகாததால் ஆவேசமடைந்த மக்கள், அதிகாரிகளின் உறுதி தந்ததை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.