போச்சம்பள்ளி: கனகாம்பரம் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய புளியம்பட்டி, பாப்பாரப்பட்டி பகுதிகளில் கனகாம்பரம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.1000-க்கு மேல் விற்ற நிலையில், தற்போது ரூ.150 முதல் ரூ.250 வரை மட்டுமே விலை போவதால் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்த திடீர் விலை வீழ்ச்சி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி