போச்சம்பள்ளி அருகே மழையால் பப்பாளி, வாழை சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கே. புதூர் கிராமத்தில் திடீரென சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பழனி என்பவரின் நூற்றுக்கணக்கான பப்பாளி மரங்களும், அப்பாவு என்பவரின் நூற்றுக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕