கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி டைட்டான் டவுன்சிப் சாலையை சேர்ந்தவர் சுனில்தக் (42) இவர் கெலமங்கலத்தில் தனியார் கிரைனைட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அங்கு வந்த மர்ம நபர், உள்ளே இருந்த 7 கிலோ கம்பிகளை திருடிய போது அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கொண்டதில் அந்த நபர் கெலமங்கலம் நேதாஜி சாலை ஜீபி பகுதியை சேர்ந்த முனிராஜ் (35) என தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 கிலோ கம்பிகளை மீட்டனர்.