கிருஷ்ணகிரி: டூ வீலர் மீது லாரி கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அத்திமுகத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (27) இவரது தாயார் மஞ்சுளா (44). இவர்களது உறவுக்கார சிறுமி மகேஸ்வரி (14). இவள் சின்னாறு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாள். ஆகிய ஆகிய 3 பேரும் டூவீலரில் சென்றனர். 

அப்போது குருபரப்பள்ளி காவல் நிலையம் எதிரில் சென்ற போது ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் அந்த வழியாக சென்ற டேங்கர் லாரி திரும்ப முடியாமல் நின்று இருந்தது. இதனால் செந்தில்குமார் தனது டூவீலரை நிறுத்தினார். 

அப்போது பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி மகேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குருபரப்பள்ளி போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி