கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே சின்னட்டி கிராமத்தில், சுரேஷ்-பாரதி தம்பதியினரின் 6 மாத ஆண் குழந்தையை, தாய் பாரதி கொலை செய்துள்ளார். பெண் தோழியுடன் ஏற்பட்ட ஓரினச்சேர்க்கை பழக்கத்திற்கு குழந்தை இடையூறாக இருந்ததால் அவர் இக்கொடூரத்தை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கணவர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீசார் பாரதி, அவரது தோழி சுமித்ரா ஆகியோரை கைது செய்து, குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.