4 தாழ்தள பேருந்துகளை துவக்கி வாய்த்த ஓசூர் எம்எல்ஏ

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓசூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து, ஓசூர் - தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் - அத்திப்பள்ளி வழித்தடங்களில் மொத்தம் 4 புதிய தாழ்தள பேருந்துகளை, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி