போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பாரூர், அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு 8 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது மேலும் சீதோஷ்ண நிலை மாறியதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி