குருபரப்பள்ளி: தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நரவந்தம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரபாகர் (48), கடந்த 5-ஆம் தேதி ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் திடீரென நின்ற பொக்லைன் இயந்திரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி