கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி போலீசார் புதூர் பகுதியில் நவ.28 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 30 மதுபாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.