வேப்பனப்பள்ளி அருகே மணவாரணப்பள்ளி கிராமத்தில் வயல் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் மணவாரணப்பள்ளி கிராமத்தில் வயல் விழா பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் சிவந்தி இப் பயிற்சியைத் தொடங்கி வைத்து, உழவன் செயலி மற்றும் வேளாண் துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினார். பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டி, மீன் அமிலம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், கன ஜீவாமிர்தம், பகந்தான் உரம் தயாரித்தல், ராகி வரிசை நடவு முறை போன்ற பல்வேறு வேளாண் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி