கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி வீரணப்பள்ளி கிராமத்தில், மதுபோதையில் தகராறு செய்த தந்தை மாதப்பன், தனது மகன் மாணிக்கத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மாணிக்கம் காயமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணிக்கத்தின் தந்தை மாதப்பன், உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்ததாக அஞ்செட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.