சூளகிரி அருகே கட்டட தொழிலாளி மாயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது கட்டிடத் தொழிலாளி முருகன், கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி சாலை விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது தாய் முனியம்மா (50) அளித்த புகாரின் பேரில், சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி