கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சிகரமாகனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அஞ்சலா, கடந்த மாதம் வீட்டில் மதுபோதையில் இருந்த தனது தம்பி ராஜகோபால் தன்னைத் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் நேற்று (மே 6) ராஜகோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.