அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய 5 பேர் மீது வழக்கு.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே வசந்தப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய குருபரப்பள்ளி போலீசார், செந்தில்முருகன் (33), கார்த்திக் (31), மகேந்திரன் (40), சந்தோஷ் (35), பைரேஸ் (30) ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி