குருபரப்பள்ளி அருகே எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள வசந்தபள்ளி கலாம் நகர் பகுதியில் உரிய அனுமதி இன்றி நேற்று முன்தினம் எருது விடும் விழா நடைபெற்றது. இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வசந்தப்பள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(31) உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி