கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாச்சிகுப்பம் கூட்டுரோடு சாலையில், சந்தோஷ் (27) என்ற இளைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் அரசுப் பேருந்தை வழிமறித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்சி நிர்வாகியின் உறவினர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.