சூளகிரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, விவசாயிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை கண்டித்தும், அவர்களுக்கு வாழ்வாதாரம் சீர்படுத்தும் வகையில், தடையற்ற சீரான மும்முனை மின்சாரம் தொடர்ந்து கிடைத்திட கோரி திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (செப்-30ம் தேதி) நடைபெற்றது.

அப்போது அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமானருமான கே. பி. முனுசாமி கண்டன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி