போச்சம்பள்ளி அருகே பராமரிப்பின்றி சுகாதார வளாகம்.

போச்சம்பள்ளி அருகே தேவீரஅள்ளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், 2021-22ல் கட்டப்பட்ட சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்திய மக்கள், தற்போது சேதமடைந்த கட்டிடத்தால் அவதிப்படுகின்றனர். உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து வேறு இடத்தில் புதிய சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி