வேப்பனப்ள்ளி அருகே மாபெரும் எருது விடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள கெங்கோஜிகொத்தூர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி, ஒசூர், ராயக்கோட்டை, வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட எருதுகள் கொண்டுவரப்பட்டன. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட எருதுகளில் வெற்றி பெற்றவைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி