ஓசூர்: வீடுகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 30 பேர் கைது

ஓசூர் அருகே பாகலூர் அடுத்த முனீஸ்வரர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டிருந்த 33 வீடுகளை வருவாய்த்துறையினர் நேற்று இடித்து அகற்றினர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாகலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால், 17 பெண்கள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என போலீசார் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி