கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மூக்காண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமரேசன் என்பவரிடம் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ் என்பவர்கள் கடனாக வாங்கிய 1 கோடி ரூபாய் 3 லட்சம், 30 லட்சத்து 50 ஆயிரம் சீட்டு பணத்தை கேட்டதற்கு, திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கும் சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ், கனகராஜ், சரசம்மா, முனிரத்தினம், சிவகுமார், கோவிந்தன் மற்றும் ரகுவின் கூட்டாளிகள் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்து காப்பாற்றினர். மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.