கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்துவின் மகன் குபேந்திரன் இவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை அருகில் நடந்து சென்ற பொழுது கீழே ஒரு செல்போன் கிடந்ததை பார்த்தார். உடனே மனித நேயத்துடன் அதனை எடுத்து வந்து ஊத்தங்கரை அண்ணா சிலை அருகே பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மோகனிடம் ஒப்படைத்தார். அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் மிகவும் நேர்மையாக செயல்பட்ட மிட்டப்பள்ளியை சேர்ந்த குபேந்திரனை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.
திமுக இளைஞரணி மண்டலக் கூட்டம் தயாராகும் உணவுகள்