ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக சுற்றுபுற சுழல் தினம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவ அலுவலர் மரு. எழிலரசி செடிகளை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் பேசும்போது உலக சுற்றுச்சூழல் தினம் 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர உறுதி கொண்டுள்ளது. 

பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் மாசுபாடு நாம் குடிக்கும் தண்ணீரிலும், உண்ணும் உணவிலும் பிளாஸ்டிக் ஊடுருவி வருகிறது. சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க வேண்டுமானால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பூமி வெப்பமயமாவதை தடுப்பதற்கு பொதுமக்கள் வீட்டில் நடக்கும் விழாக்களில் செடி மரங்களை நட வழக்கமாக்கிக் கொண்டு பூமி வெப்பமாவதை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி