கிருஷ்ணகிரி: குடிநீர் குழாய் சரிசெய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில், புதூர், மண்ணாடிபட்டி வழியாக செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாய் ஒன்று உடைந்து ஒரு வார காலமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடிநீர் வீணாகிறது. சம்பந்தப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் உடனடியாக இந்த குழாயை சரிசெய்ய வேண்டும் என சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி