கிருஷ்ணகிரி: அனுமதியின்றி கனிம வளம் எடுத்துச்சென்ற வாகனம் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை கனிமவளத்துறை அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அனுமதியின்றி கனிம வளம் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் பாலேப்பள்ளி உள்வட்டம் செந்தாரப்பள்ளி தரப்பு தூளிகொட்டாய் கிராமத்தில் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி செல்லப்பட்ட TN78 B 9831 என்ற எண் கொண்ட வாகனத்தை பர்கூர் வட்டாட்சியர் பொன்னாலா தலைமையிலான குழுவினர் வாகனத்தை கனிமத்துடன் கைப்பற்றி கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி