ஊத்தங்கரை: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தொழிலதிபர் பெருமாள் நாயக்கம்பட்டி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றத் தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. முன்னதாக டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதுதொடர்ந்து முப்பால் நிறுவன ஆசிரியர் கவியரசு, மாலை முரசு செய்தியாளர் ராஜாராம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி