கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (45). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிவகுமார்(49) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை நிலப்பிரச்னை காரணமாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பிலிருந்தும் சிவகுமார், மகேஸ்வரி, பொன்னுசாமி, ஜீவா, ஜெயவேல் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.