கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கல்லாவியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (பிப்-5) காலை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இரத்த பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன், கண் பரிசோதனை, மகப்பேறு, இதய நோய், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 17 சிறப்பு நிபுணர்களின் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஏராளமான நோயாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.