கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா அலுவலக முன்பாக இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், அரசு ஊழியர்களுக்கு இதுவரை எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்றும் கூறி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.