கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள படப்பள்ளி திம்மராய சாமி கோவிலில், பட்டக்கானூர் படப்பள்ளி ஊர் பொதுமக்கள் சேர்ந்து ஸ்ரீராமநவமி தினத்தன்று கோவில் தேர்த்திருவிழா நடைபெறுவதை ஒட்டி நேற்று பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அடுத்த மாதம் 5-ஆம் தேதி அன்று திம்மராய சாமிக்கு அபிஷேக ஆராதனை உற்சவ சாமிகளுக்கு திருமஞ்சன சேவை நடைபெறும் என்று விழா குழுவினர் தெரிவித்தனர்.