கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் யானை தந்தத்தில் விநாயகர் சிலை இருப்பதாக சென்னை மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி வனசரகர் முனியப்பன் தலைமையில் நேற்று நடைபெற்ற சோதனையில் ஊத்தங்கரை அண்ணாநகர் பகுதியில் ரஞ்சித் என்பவரின் வீட்டில் பதிக்க வைத்திருந்த யானை தந்தத்தில் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர்.