ஊத்தங்கரை: ரூ. 86 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி. எம். தமிழ்செல்வம் கலந்துகொண்டு, இரண்டாம் கட்டமாக ரூ. 6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இறகுபந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி