ஊத்தங்கரை: உயர் மட்ட மேம்பால பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தின் கதவணி ஊராட்சியில், பாம்பாறு மற்றும் கொரட்டி ஆறு பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ரூ. 15 கோடியே 31 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேம்பாலப் பணிகளின் முன்னேற்றத்தை அவர் விரிவாக கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி