கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.