ஊத்தங்கரை: சிறுமியுடன் திருமணம்.. வாலிபர் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கெங்கபிராம்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் லோகேஸ்வரன் (29) இவரும், ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக மாவட்ட சமூக நலத் துறைக்கும் மகளிர் உரிமைத்துறைக்கும் தகவல் வந்தது. அதன்பேரில் சமூக நலத் துறை அலுவலர் காந்திமதி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் லோகேஸ்வரன் சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் லோகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி