கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் நேற்று அங்கலம்மன் அம்மன் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்க, பக்தர்கள் நேர்த்திக்கடனாக கரகங்கள் மற்றும் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊத்தங்கரை 4-ங்கு வழி சாலையில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்வின்போது, கரகம் ஏந்திச் சென்ற பக்தர்கள், சாலையில் படுத்திருந்த பெண்கள் மீது தாண்டிச் சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.