நேற்று முன்தினம் (செப் 30) இரவு இவர் ஊத்தங்கரை ஜண்டாமேடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்ட போது அங்கு வீராட்சிகுப்பம் சக்திவேல் (24) மோகன் (21) ஆகியோர் மது அருந்தி விட்டு பார்த்திபனுடன் போதையில் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பார்த்திபன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து சக்திவேல், மோகன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அதேபோல் சக்திவேல், கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் (26) உலகநாதன் (35) சங்கர்(26) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.