சாமல்பட்டியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து. 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி தரைப் பாலத்தில் ஏபிஜி தனியார் பேருந்தும் மற்றும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

அருகிலிருந்த ஊர் பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும், சாம்பல்பெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி