ஊத்தங்கரையில் மருத்துவரை மிரட்டி பணம் கேட்ட இரண்டு பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (டிச.14) காலை இரண்டு பேர் சென்று மருத்துவரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

 இது குறித்து மருத்துவமனை மருத்துவர் சித்ரா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக அரூர் வட்டம் நவலையை சேர்ந்த மூக்கையன் (40) ஊத்தங்கரை தாலுகா கே. மோட்டூரை சேர்ந்த குமரேசன் (49) என தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி