ஊத்தங்கரை அருகே மேனேஜரை தாக்கிய இருவர் கைது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அனுமந்தீர்த்தம் பகுதியில் உள்ள தனியார் பால் கம்பெனி மேலாளர் அந்தோணி(42) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, திப்பம்பட்டி காடு அருகே சம்பத் மற்றும் அருணகிரி ஆகிய இருவரால் வழிமறிக்கப்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. காயமடைந்த அந்தோணி அளித்த புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீசார் சம்பத் மற்றும் அருணகிரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி