கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் மோகன் குமாரின் ஆலோசனைப்படி, விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் சத்ரியன் ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில், கால்நடை பராமரிப்புத் துறை கையேடு, தாது உப்பு, தீவன சோள விதைகள், மண் புழு உரம் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.