கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் செல்லும் சாலை வெப்பாலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பெய்து வரும் மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக பள்ளி வளாகத்தில் மண் கொட்டி சீர் செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.